Posts

எனக்கான கவிதை அவன்... 1

நிலா சரண்... என் பேர் அழகென்று எப்பொழுதுமே எனக்கு ஒரு திமிருண்டு.. நிலா அழகா என்று எனக்கு தெரியவில்லை... சரண் நிச்சயம் அழகு தான்... திமிரும் அழகும் அவனுக்கு அதிகமாகவே உண்டு. நான் பார்த்த., ரசித்துக் கடக்கின்ற பலரை விடவும் அவன் வித்தியாசமானவன். 'சிரிக்கவே தெரியாதா டீ இவனுக்கு...' என என் கல்லூரி பெண்களின் குமுறலை அடிக்கடி கேட்க முடியும். நான் அப்போது தான் இளங்கலை முதல் வருட படிப்பில் இருந்தேன். அவன் முதுகலை இறுதியாண்டு. IT டிப்பார்ட்மென்ட் என்பதை விடவும் சரண் டிப்பார்ட்மென்ட் என்றே பெண்களிடம் பிரபலம். அவன் மேல் பெண்களுக்கு இவ்வளவு ஆர்வம் என்றால் முக்கிய காரணம் எந்த பெண்ணுடனும் அவன் பேசாதது தான் என்றே தோன்றுகிறது. காதலிப்பதாக சொன்ன ஜூனியர்ஸை அண்ணா என்று அழைக்கவைத்தான் என்று வேற கேள்வி. எனக்கும் அவனை பிடிக்கும். ஆனால் அவன் அளவுக்கு இல்லை என்றாலும் நானும் திமிர் தான். 'அதெல்லாம் பிடிக்காது.. அவன்லாம் ஒரு ஆளா... ' என தோழிகளிடம் அலட்டிக்கொள்ளாமல் பதில் சொல்வதுண்டு. எங்கே என்னையும் அண்ணா என அழைக்க சொல்லிவிடுவானோ என்று ஒரு பயம் தான்... அவனிடம் பேசவே கூடாது தூரமாய்